வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

vinoth
புதன், 26 நவம்பர் 2025 (17:08 IST)
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன். இவரின் தந்தை மோகனன் பாலிவுட்டில் முன்னணி ஒளிப்பதிவாளராக திகழ்கிறார். அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நடித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றாலும் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை. நடிப்பில் மாளவிகாவுக்குக் கிடைத்த ரசிகர்களை விட, அவரின் புகைப்படங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள்தான் அதிகம். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.

இந்நிலையில் அவர் தற்போது பிரபாஸுடன் ராஜாசாப் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். இந்த படம் பற்றி பேசியுள்ள மாளவிகா “வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது. ஒரு பாடல் இருக்கும். கொஞ்சம் அதிர்ஷ்டம் அடித்தால் இரண்டு பாடல்கள் கிடைக்கும்.  ஆனால் ராஜாசாப் படத்தில் எனக்கு நல்ல வேடம். ஒரு நடிகைக்கு இதுபோல வலுவான வேடம் அமைவது பெரிய விஷயம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி - பிரஜின் இடையில் வெடித்த வாக்குவாதம்! பின்னணி என்ன?

பட புரோமோஷனுக்காக என்னெல்லாம் பண்ண வேண்டியிருக்கு? பிக்பாஸ் வீட்டில் கீர்த்தியின் மைண்ட் வாய்ஸ்

‘கார்த்திகை தீபம்’ தொடரில் இணைந்த விஜய் பட நடிகை.. காவல்துறை அதிகாரி கேரக்டரா?

எத்தனையோ வெற்றிகளைக் கொடுத்திருந்தாலும் அந்த தோல்வி என்னைப் பாதித்தது – ரகுல் ப்ரீத் வருத்தம்!

ஜனநாயகன் படத்தில் நடிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன்… நடக்கவில்லை – பிரபல நடிகர் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments