சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். பியாண்ட் த கிளவுட்ஸ்படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
அதையடுத்து தமிழில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பெரும் பிரபலமாகிவிட்டார். ஒரே படத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை மயக்கிவிட்டார். படம் பார்த்துவிட்டு மாலு... மாலு என தளபதி ரசிகர்கள் புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.
எப்போதும் மாடர்ன் உடைகளில் வித விதமாக போஸ் கொடுத்து வரும் மாளவிகா மோகனன் தற்போது வெள்ளை சுடிதாரில் தேவதை போன்று பாஸ் கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களை சுருட்டி மடித்துவிட்டார். அம்மணியின் அழகில் மயங்கிய ரசிகர்கள் வித விதமாக வர்ணித்து தள்ளியுள்ளனர்.