சென்னையில உங்க கூட தான் மாஸ்டர் பார்க்கபோறேன் - மாளவிகா மோகனன்!

Webdunia
வியாழன், 21 மே 2020 (15:16 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.     ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கினாள் தள்ளிப்போன மாஸ்டர் படம் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று படத்தின் கதாநாயகியான மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் உரையாடினார். அப்போது மாஸ்டர் படம் குறித்த நிறைய கேள்விகளுக்கு பதில் கூறிய அவர் இந்த படத்தை சென்னையில் தளபதி ரசிகர்களாகிய உங்களுடன் தான் பார்க்கப்போகிறேன் என கூறினார். இது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்ததோடு மாளவிகாவை மனதார வரவேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு.. நடிகை கீர்த்தி சுரேஷ் சர்ச்சை கருத்து..!

மகிழ் திருமேனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஷ்ரத்தா கபூர்!

டிசம்பர் மாதம் கேரளாவில் தொடங்கும் சூர்யாவின் 47 ஆவது படத்தின் ஷூட்டிங்!

எனக்கெதிராக போர் நடந்தால் போராட வேண்டும்… வருங்கால கணவர் குறித்து ராஷ்மிகா விருப்பம்!

கல்கி & ஸ்பிரிட் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்?... முதல் முறையாக மௌனம் கலைத்த தீபிகா படுகோன்!

அடுத்த கட்டுரையில்
Show comments