Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரன்வீர் கபூரின் அடுத்த படத்தில் ‘தளபதி 64’ நாயகி?

ரன்வீர் கபூரின் அடுத்த படத்தில் ‘தளபதி 64’ நாயகி?
, புதன், 11 டிசம்பர் 2019 (09:43 IST)
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 64’ படத்தில் நாயகியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் அடுத்ததாக ரன்பீர் கபூர் நடிக்கவிருக்கும் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
கடந்த இரண்டு நாட்களாக ரன்பீர் கபூருடன் மாளவிகா மோகனன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விசாரித்தபோது ரன்பீர் கபூருடன் மாளவிகா மோகனன் ஒரு விளம்பரப் படத்தில் நடித்து வருவதாகவும், இந்த விளம்பர படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படங்கள்தான் வைரலாகி வருவதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் விளம்பர படத்தின் படப்பிடிப்பின்போது மாளவிகா மோகனன் நடிப்பை பார்த்து அசந்து போன ரன்பீர் கபூர், தனது அடுத்த படத்தில் அவரை நாயகியாக ஒப்பந்தம் செய்ய பரிந்துரை செய்திருப்பதாகவும், ரன்பீர் கபூர் மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
தளபதி விஜய்யின் படத்தில் நாயகியானதால் ஒரே நாளில் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான மாளவிகா மோகனன், அடுத்ததாக ரன்வீர் கபூர் படத்தில் நடிக்க இருப்பதால் அகில இந்திய அளவில் புகழ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட்லியின் அடுத்த பட ஹீரோ குறித்த தகவல்