Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது திரைப்படம் "மலை"

J.Durai
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (09:21 IST)
லெமன் லீப் கிரியேசன்ஸ்  தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்திருக்கும் படம் "மலை"
 
யோகிபாபு,லக்‌ஷ்மி மேனன்,  காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி ஆகியோர்கள்
நடிப்பில் உருவாகியிருக்கு இத் திரைப்படம் செப்டம்பரில் வெளியாகிறது.
 
இப்படத்தை அறிமுக இயக்குனர் IP முருகேஷ் இயக்கியிருக்கிறார்.
 
மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது , மனிதர்களை போல விலங்குகளும், தாவரங்களும் மலைகளும் , ஆறுகளும் நீர் நிலைகளும்  இந்த பூமியில் அதி முக்கியமானதாக இருக்கிறது.
 
அதீத மனித ஆசையால் இயற்கையை மெல்ல மெல்ல மனிதர்கள் தங்கள்  சுயநலத்திற்காக அழித்து வந்துள்ளார்கள்.
 
மனிதன் முதலில் தன் சுய நலத்துக்காக சுரண்ட ஆரம்பித்தது சக மனிதனிடமிருந்து தான். 
 
அப்படி இரக்கமில்லாமல் சுரண்ட ஆரம்பிக்கும் மனிதன் மெல்ல மெல்ல இயற்கை வளங்களை சுரண்ட ஆரம்பிக்கிறான். இதிலிருந்து தப்பிக்க அதிகாரம்,அரசியல், மதம்,சாதி,இனம் என்று இதற்கு பின்னால் நின்றுகொண்டு சக மனிதர்கள் மீது அன்பை மறந்து எதிர்கால சந்ததியினரின் வாழ்வை குறித்து கவலைப்படாமல் மனித பேராசை இயற்கையை மொத்தமாக இன்று அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.
 
தமிழக மலைக்கிராமம் ஒன்றில் நடக்கும் இந்த கதை மனிதனின் சுய நல கோரப்பசிக்கு இயற்கையின் பதில் என்ன? என்பதைப்பற்றிய ஒரு படைப்பாக வந்திருக்கிறது.
 
யோகிபாபு லக்‌ஷ்மி மேனன் காளிவெங்கட் முதன்மை கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள்.
 
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
 
இமான் இசையமைத்திருக்கிறார்.
 
செப்டம்பர் மாதம் வெளியாகும் இத் திரைப்படத்தின்  பாடல்கள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மின்னல் வேகத்தில் ‘கேங்கர்ஸ்’ பட ஷூட்டிங்கை முடித்த சுந்தர் சி

GOAT படத்தில் நயன்தாரா நடிக்க மறுத்தக் காரணம் இதுதானா?

"தோழர் சேகுவரா" திரை விமர்சனம்!

பெயரை மாற்றிக் கொண்ட ஆலியா பட்!

பெண் திரைப்படக் கலைஞர்கள் மீது ஆபாசமான அவதூறு பரப்பும் காந்தராஜ், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக மகளிர் ஆணையம் இப்பிரச்சனையில் தலையீட வேண்டும்- அனைத்திந்த

அடுத்த கட்டுரையில்
Show comments