Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேஜர் ரவி இயக்கத்தில் நடிக்கும் அதர்வா!

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (14:59 IST)
இந்திய ராணுவம் சம்பந்தப்பட்ட படங்களை எடுத்து கவனம் ஈர்த்தவர் மலையாள இயக்குனர் மேஜர் ரவி.

இவர் மோகன்லால், ஜீவாவை வைத்து இயக்கிய கீர்த்தி சக்ரா படம் தமிழில் அரண் என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து குருஷேத்ரா என்ற படத்தில் மேஜர் ரவியின் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு செவன்டி ஒன் வார் என பெயர் வைத்துள்ளனர்.

மோகன்லால், மம்முட்டியை வைத்து படங்கள் இயக்கி வந்த மேஜர் ரவி தனது கடைசிப்படம் பிக்கெட்டை பிருத்விராஜை வைத்து இயக்கினார். அப்படம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இப்போது அவர் அதர்வாவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். ரவியின் மற்ற படங்களைப் போலவே இந்த படமும் ராணுவ பின்புலத்தை மையமாகக் கொண்டதுதான் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments