Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் பெயர் : வில்லனாகும் இயக்குனர் - வெளியானது தகவல் !

பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் பெயர் : வில்லனாகும் இயக்குனர் - வெளியானது தகவல் !
, செவ்வாய், 28 ஜனவரி 2020 (09:57 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் பாக்ஸிங் படத்தில் ஆர்யாவுக்கு வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனி நடிக்க இருக்கிறார்.

காலா படம் வணிக ரீதியாகத் தோல்வி அடைந்ததால்  அவர் இயக்க இருந்த பிரம்மாண்டமான இந்திப்படம் தாமதமாகி வருகிறது. இதனால் அந்த இடைவெளியில் தமிழில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த கதை வடசென்னையில் நடந்த உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டது என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு அவர் சல்பேட்டா பரம்பரை என்ற பெயரை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் ஆர்யா, கலையரசன் மற்றும அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். பாக்ஸிங் சம்மந்தப்பட்ட கதை என்பதால் ஆர்யா பாக்ஸிங் கற்றுக் கொண்டு வருகிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் வில்லனாக பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி நடிக்க இருக்கிறார்.

இவர் அருண் விஜய் நடித்த தடையறத் தாக்க, தடம் மற்றும் மீகாமன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பவர் குறிப்பிடத் தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் படத்தை மிஸ் செய்தவருக்கு அடித்த லக்: சூர்யாவுக்கு வில்லனாகிறாரா?