Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகேஷ் பாபுவுக்கு கொரோனா - தற்போதைய நிலை என்ன?

மகேஷ் பாபுவுக்கு கொரோனா - தற்போதைய நிலை என்ன?
, வெள்ளி, 7 ஜனவரி 2022 (11:43 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

 
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் ஸ்பைடர் படமும் தமிழில் வெளியானது. இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு கால் முட்டியில் அடிபட்டிருப்பதாகவும், அதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்க செல்ல இருக்கிறார் என்றும் தகவல் வெளியானது. 
 
அறுவை சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறிய நிலையில் படப்பிடிப்பில் அவர் கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. தற்போது துபாயில் இருக்கும் மகேஷ் பாபு, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவலை தெரிவித்துள்ளார். 
 
லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். மேலும், சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரைக்கதை மன்னன் பாக்யராஜுக்கு ஹேப்பி பர்த்டே...!