நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தாயார் இந்திராணி என்பவர் இன்று காலை காலமானார். அவர் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சையின் பலனின்றி காலமானதாகவும் கூறப்படுகிறது. 
 
									
										
			        							
								
																	
	 
	பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயாருமான இந்திராணி மறைவுக்கு நடிகர் சிரஞ்சீவி உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	இன்று காலை அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்றும் இன்று இரவு அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.