Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் படத்தில் மகேஷ் பாபு மகள்… கதைக்களம் இதுதானாம்!

விஜய் படத்தில் மகேஷ் பாபு மகள்… கதைக்களம் இதுதானாம்!
, செவ்வாய், 5 அக்டோபர் 2021 (17:22 IST)
நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள விஜய் 66 படத்தில் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

விஜய்யுடன் தில் ராஜூ மற்றும் வம்சி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் தளபதி 66 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது படத்தின் வேலைகளில் ஈடுபட்டுள்ள வம்சி  வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

இந்நிலையில் மற்றொரு முக்கியமான தகவலும் வெளியாகியுள்ளது. படத்தில் விஜய்யின் மகளாக நடிக்க மகேஷ் பாபுவின் மகள் சித்தாரவை நடிக்க வைக்க இயக்குனர் வம்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநாடு படத்துக்கு சிம்புவால் வந்த கூடுதல் செலவு!