Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெட்பிளிக்ஸில் எந்தவொரு தமிழ்ப் படமும் படைக்காத சாதனையைப் படைத்த விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!

vinoth
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (07:38 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது மகாராஜா. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

கடந்த காலங்களில் விஜய் சேதுபதியின் எந்த படமும் தொடாத வசூல் சாதனையை மகாராஜா செய்துள்ளது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பல நாடுகளில் நம்பர் 1 இடத்தில் ட்ரண்டிங்கில் இருந்தது.

இந்நிலையில் இப்போது மகாராஜா திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. மகாராஜா திரைப்படம் இதுவரை 15.5 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தவொரு தமிழ் திரைப்படமும் இந்த சாதனையை நிகழ்த்தியதில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம் மறுத்த கதாபாத்திரத்தில் நடிக்கும் மாதவன்… ராஜமௌலி-மகேஷ்பாபு பட அப்டேட்!

மாஸ் மகாராஜா பாலய்யா is Back… எப்படி இருக்கு அகாண்டா 2 டீசர்?

கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு… கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

மல்டி ஸ்டார் படமாக மாறும் பென்ஸ்… முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஹரிஷ் கல்யாண் ஒப்பந்தம்!

ரஜினிக்காக முதல் முறையாக குரல் கொடுக்கும் டி ராஜேந்தர்… கூலி பட பாடல் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments