Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகளவில் 150 கோடி ரூபாய் வசூல்… மகாராஜா திரைப்படம் படைத்த சாதனை!

vinoth
சனி, 7 டிசம்பர் 2024 (13:30 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த காலங்களில் விஜய் சேதுபதியின் எந்த படமும் தொடாத வசூல் சாதனையை மகாராஜா செய்துள்ளது.

இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பல நாடுகளில் நம்பர் 1 இடத்தில் ட்ரண்டிங்கில் இருந்தது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகமாகப் பார்க்கப்பட்ட இந்தியப் படங்களின் வரிசையில் முதலிடத்துக்கு சென்றது. நெட்பிளிக்ஸில் இந்த படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் லாபத்தை ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து சீனாவில் மகாராஜா திரைப்படம் கடந்த 29 ஆம் தேதி மிக அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீஸானது. முதல் இரண்டு நாட்களில் மட்டும் இந்த படம் 20 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த நிலையில் அதன்பிறகு பெரிய அளவில் வசூல் இல்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது உலகளவில் ‘மகாராஜா’ திரைப்படம் 150 கோடி ரூபாய் திரையரங்குகள் மூலமாக மட்டும் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ஏஞ்சல் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

சித்தார்த் ஒரு அடிமுட்டாள்… 3BHK பட டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் ராம் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments