விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்த மஹான் திரைப்படம் இன்று இரவு அமேசான் ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் மஹான் படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்ற தொலைக்காட்சி நிறுவனம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
மஹான் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி மிகப்பெரிய தொகை பெற்றுள்ளதாகவும் இந்த படத்தை அந்த தொலைக்காட்சி வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.