Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மண்டேலா, மாவீரன் புகழ் மடோன் அஸ்வினின் அடுத்த படத்தில் விக்ரம்மா?

vinoth
வியாழன், 21 நவம்பர் 2024 (08:05 IST)
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீரன் திரைப்படத்தை இயக்கினார். அவர் இயக்கிய முதல் படத்துக்கும் இரண்டாம் படத்துக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது.

இரண்டாவது படத்தில் அவர் சிவகார்த்திகேயன் என்ற மாஸ் ஹீரோவுக்காக சமாதானங்கள் செய்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் அவர் பாலிவுட்டில் பிரபல இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. அதற்கு முன்னதாக தமிழில் ஒரு படத்தை அவர் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே விக்ரம் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதனால் எந்த படம் முதலில் தொடங்கும் எனக் கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments