Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் நடிக்கும் மாதவனின் தோற்றம்

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (11:02 IST)
இஸ்ரோவின் விஞ்ஞானி நம்பி நாராயணன் பணத்துக்காக ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைது செய்யப்பட்டார். 


 
இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு அவர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். மீண்டும் பணியில் சேர்ந்த அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை. 2001-ல் ஓய்வு பெற்றார். பொய் வழக்கில் தன்னை சிக்க வைத்த அதிகாரிகள் மீது நம்பிநாராயணன் தொடர்ந்த வழக்கில் அவருக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.
 
நம்பிநாராயணன் வாழ்க்கை தற்போது சினிமா படமாக தயாராகிறது. இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். நம்பிநாராயணனின் இளம் வயது வாழ்க்கை, இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தது, சாதனைகள், பொய்வழக்கில் சிக்க வைத்தது, கைது நடவடிக்கை ஆகியவை படத்தில் இடம்பெறுகிறது.
 
இந்த படத்தில் மாதவன் 3 தோற்றங்களில் வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் இந்த படம் தயாராகிறது. ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். நம்பி நாராயணன் வேடத்தில் நடிக்கும் மாதவன் தோற்றம் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு மாதத்திற்கு படத்தை வெளியிட முடியாது! வீர தீர சூரனுக்கு தடை! - அதிர்ச்சியில் தியேட்டர்கள், ரசிகர்கள்!

ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லாம் காணோம்? - Avengers Doomsday அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

எனக்கும் எல்லோரைப் போலவும் திருமண ஆசை இருந்தது… ஆனால்?- மனம் திறந்த ஷகீலா!

அடுத்த கட்டுரையில்
Show comments