Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி : இஸ்ரோ மீண்டும் சாதனை!

விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி : இஸ்ரோ மீண்டும் சாதனை!
, வியாழன், 29 நவம்பர் 2018 (14:54 IST)
இந்திய விண்வெளி  ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ள ஹைசில் என்ற செயற்கைக்கோள் உட்பட 31 செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 43 ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி  ஆய்வு மையத்தில் இருக்கும் முதல் தளத்தில் இருந்து பிஎஸ். எல்.வி - 43  ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
 
நேற்று மாலையில் இருந்து ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான நடந்து வந்த நிலையில் இன்று காலை 9- 58 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
 
இந்த பி.எஸ்.எல்.வி  ராக்கெட்டின் மூலம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா , கனடா. மலேசியா , கேட்டலோனியா போன்ற எட்டு நாடுகளைச் சேர்ந்த  30 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில் அவற்றில் நம் இந்தியயாவின்  ஹைசிஸ் செயறகைக்கோளூம் அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்த செயற்கை கோளின் மூலம் காட்டுத் தீ, தீவிர வாதிகள் நடமாட்டம் போன்றவற்றை கண்கணிக்க முடியும். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவ்வளவு மழையிலும் நனையாத சென்னை: வெதர் ரிபோர்ட்!