Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி விக்ரம் வேதா ஷூட்டிங்… விசிட் அடித்த மாதவன்!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (15:13 IST)
பல இழுபறிகளுக்குப் பிறகு இப்போது இந்தியில் விக்ரம் வேதா திரைப்படத்தின் ஷுட்டிங் தொடங்கியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான அமீர் கான் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தை அமீர் கானும், மாதவன் கதாப்பாத்திரத்தை சயிஃப் அலிகானும் ஏற்று நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்ரி ஆகியோரே இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த அமீர்கான் விலகவே அவருக்குப் பதில் ஹ்ருத்திக் ரோஷன் நடிக்க ஒப்பந்தமானார். அதையடுத்து இப்போது விறுவிறுப்பாக பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் படத்தின் பின்னணி இசையமைப்புப் பணிகளுக்கு தமிழ் பதிப்பின் இசையமைப்பாளரான சாம் சி எஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். ஆனால் பாடல்களுக்கு பாலிவுட்டை சேர்ந்த இசையமைப்பாளர் பணிபுரிய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படப்பிடிப்பு தளத்துக்கு விசிட் அடித்துள்ள மாதவன் படத்தின் நாயகன் ஹ்ருத்திக் ரோஷனை புகழ்ந்துள்ளார். அதில் ‘ஹுருத்திக் ரோஷன் உலகையே ஆளப் பிறந்தவர் போல இருக்கிறார்’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளையராஜாவுடன் சந்திப்பு.. தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோடி..!

‘ராஜாசாப் படத்தின் பாடல்களை எல்லாம் அழித்துவிட்டேன்’… இசையமைப்பாளர் தமன் தகவல்!

2024-25ல் மட்டும் ரூ.120 கோடி வரி செலுத்திய அமிதாப் பச்சன்.. ஆச்சரிய தகவல்..!

திரையரங்கம் சிதறட்டும். பொடிசுங்களா கதறட்டும்.. ‘குட் பேட் அக்லி’ சிங்கிள் பாடல்..!

தெலுங்கு மற்றும் இந்தியில் கூலி படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments