Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பி நாராயணன் கெட்டப்பில் மனைவியோடு ரொமான்ஸ் செய்த மாதவன்… வைரல் புகைப்படம்!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (14:55 IST)
நடிகர் மாதவன் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராக்கெட்ரி திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

 இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.  இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் வந்தார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலிஸுக்கு தயாராக உள்ளது. ரிலிஸூக்கு சரியான நேரம் பார்த்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக காத்திருந்தார் மாதவன். சில முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில் கேன்ஸ் விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள நடிகர் மாதவன் இந்த படம் ஜூலை 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் தமிழ் வெர்ஷனில் சூர்யாவும், இந்தி வெர்ஷனில் நடிகர் ஷாருக் கானும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர். படத்துக்கான ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வரும் மாதவன் தற்போது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. நம்பி நாராயணன் கெட்டப்பில் இருக்கும் மாதவன் மனைவியோடு ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தைப் பகிர்ந்து “இந்த புகைப்படத்தை எனது மனைவியின் சகோதரர்களுக்கு நான் அனுப்பியபோது அவர்கள் அதிர்ச்சியாகிவிட்டார்கள்” என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments