விண்ணை தாண்டி வருவாயா 2' படத்தில் சிம்பு இல்லை: கவுதம் மேனன் அதிரடி

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (08:35 IST)
சிம்பு, த்ரிஷா நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கவுதம் மேனன் இயக்கிய காதல் காவியம் 'விண்ணை தாண்டி வருவாயா' இந்த படம் காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க கவுதம் மேனன் திட்டமிட்டிருந்தார்

ஆனால் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பின்போது சிம்பு கொடுத்த டார்ச்சரால் மனம் நொந்து போன கவுதம் மேனன், விடிவி 2' படத்தின் நாயகனாக சிம்புவுக்கு பதில் மாதவனை தேர்வு செய்துள்ளார். கவுதம் மேனனின் முதல் படமான 'மின்னலே' படத்திற்கு பின்னர் மீண்டும் இருவரும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் ஜெஸ்ஸி வேடத்தில் த்ரிஷாவே நடிப்பார் என்று கூறப்படுகிறது. காதல் தோல்வி அடைந்த கார்த்திக் 8 வருடங்களுக்கு பின் என்ன நிலையில் இருக்கின்றார், ஜெஸ்ஸியை மீண்டும் சந்தித்தாரா என்பதே இந்த படத்தின் கதையாம். மேலும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் புனித் ராஜ்குமார் மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோர் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்ப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments