Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகருடன் பிறந்தநாள் கொண்டாடிய மாதவன்

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (18:54 IST)
நடிகர் மாதவன் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுடன் ஜீரோ படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து கொண்டிருப்பவர் மாதவன். இவர் தற்போது ஷாருக்கானுடன் இணைந்து பிரபல இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஜீரோ படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்தப்படத்தில் அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடிக்க இருக்கிறார். ஷாருக்கானும் சல்மான் கானும் 10 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் ஜீரோ படத்தின் படப்பிடிப்பில் நடிகர் மாதவன், ஷாருக்கானுடன் இணைந்து தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அனுஷ்கா சர்மா மற்றும் ஆனந்த் எல் ராய் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

ஒருவழியாக தொடங்குகிறதா சிம்பு – தேசிங் பெரியசாமி படம்?

75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments