Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் ‘காலா’வுக்கும், தெலுங்கு ‘காலா’வுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (16:56 IST)
தமிழ் ‘காலா’வுக்கும், தெலுங்கு ‘காலா’வுக்கும் இடையே முக்கியமான ஒரு வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது.
 
ரஜினிகாந்த் நடிப்பில், பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காலா’. நானா படேகர், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, அருள்தாஸ், மணிகண்டன், ஈஸ்வரி ராவ், அஞ்சலி பாட்டீல், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. வருகிற 7ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸாகிறது.
 
இந்தப் படத்துக்கு, மத்திய தணிக்கை வாரிய உறுப்பினர்கள் ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். 14 வெட்டுகளுக்குப் பிறகு இந்த சான்றிதழ் தரப்பட்டுள்ளது. தமிழைப் போலவே தெலுங்கிலும் ‘யு/ஏ’ சான்றிதழ் தான் கிடைத்துள்ளது. ஆனால், தெலுங்கில் எக்ஸ்ட்ராவாக சில காட்சிகளை வெட்டியிருக்கலாம் என்கிறார்கள்.
 
காரணம், ‘காலா’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள். அதாவது, 169 நிமிடங்கள். ஆனால், தெலுங்கில் ரன்னிங் டைம் 166 நிமிடங்கள் மட்டுமே. எனவே, 3 நிமிடங்கள் இடம்பெறக் கூடிய ஒன்றிரண்டு காட்சிகளைத் தெலுங்கில் வெட்டியிருக்கலாம் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments