Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வில்லன் வேடத்தில் நானா? மாதவன் எடுத்த முடிவால் ஆதிக்கு கிடைத்த வாய்ப்பு!

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (15:07 IST)
ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குனர் லிங்குசாமி அதன்பின் ரன், சண்டக்கோழி, பையா உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கினார்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அவர் எந்த படத்தையும் இயக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் ஒரு தெலுங்கு படத்தை இயக்க உள்ளார் என்று செய்திகள் ஏற்கனவே வெளிவந்தது .இந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தெனி ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக உப்பேன்னா படத்தில் நடித்திருந்த கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்காக பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சரிவராத நிலையில் இப்போது லிங்குசாமி படங்களில் கதாநாயகனாக நடித்த மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரும் சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மாதவன் அந்த வேடத்தில் நடிக்க வில்லை என சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக நடிகர் ஆதி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் அளித்த நடிகை.. திடீரென வாபஸ் பெற்றதால் பரபரப்பு..!

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர்ஜே பாலாஜி.. என்ன காரணம்?

என் தந்தை ஒரு லெஜெண்ட்; பொய்யான தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும்.. ஏஆர்.ரஹ்மான் மகன்

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மாடர்ன் உடையில் மிரட்டும் போஸ்களில் ரைஸா வில்சன்!

அடுத்த கட்டுரையில்
Show comments