மாநாடு படக்குழு பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு கிளம்பி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
நடிகர் சிம்பு கொரோனா லாக்டவுனுக்கு முன்னர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் கொரோனா பாதிப்புக்குப் பின் அவர சுசீந்தரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். தற்போது பாண்டிச்சேரியில் அதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.சில வாரங்களுக்கு முன்னர் வீசிய நிவர் புயலால் பாண்டிச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் அங்கு நடந்து கொண்டிருந்த மாநாடு படப்பிடிப்பு அனைத்தும் அரங்கிற்குள் நடக்கும் காட்சிகளை படமாக்கினர். இதனால் படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் இப்போது முடிக்கப்பட்டு விட்டனவாம்.
மீதியுள்ள 20 சதவீத படப்பிடிப்புகள் அனைத்தும் வெளிப்புறத்தில் நடக்க உள்ளதால் மழையின் தீவிரம் குறைந்ததும் மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் என இப்போது படக்குழு சென்னைக்கு திரும்பியுள்ளதாம்.