Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநாடு படம் பார்த்து எஸ் ஜே சூர்யா போட்ட டிவிட்… சிம்பு ரசிகர்களுக்கு டானிக்!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:03 IST)
சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாநாடு படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. முஸ்லீம் கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ள இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ் லுக், டீசர் போன்றவை முன்னதாக வெளியாகி வைரலாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தை எதிர்வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தீபாவளிக்கு ரிலிஸ் ஆவதாக இருந்த மாநாடு நவம்பர் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது சிம்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் இப்பொது எஸ்ஜே சூர்யா பகிர்ந்துள்ள டிவிட் அவர்களுக்கு சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர்  'எட்டு நாள் மாநாடு டப்பிங் வேலையை 5 நாளில் முடித்தேன். என்னுடைய நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை எல்லாம் போச்சு. 10 நாளாவது  ஓய்வு வேண்டும் என்று என் உடல் கெஞ்சுகிறது. ஆனால் அவுட்புட்டை பார்த்த பிறகு, உங்க எல்லோருக்கும் ஒன்றை சொல்லிக்கிறேன்... தீபாவளி நவம்பர் 25 தான்டா.' எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments