Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடக்கம் எப்படியானதாக இருந்தாலும், முடிவை சிறப்பானதாக்கிவிட வேண்டும் – மாநாடு தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (09:46 IST)
மாநாடு படத்தின் 50 ஆவது நாளைக் கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாநாடு படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதுபோல சிம்புவின் படம் ஒன்று அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்து ஒரு மாமாங்கம் ஆகிறது. அதே போல இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் லாபமாக அடுத்த படங்களில் சம்பளம் கணிசமாக ஏறியுள்ளது. திரையரங்கு வருவாய் மூலமாக மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய முதல் சிம்பு படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் 50 ஆவது நாளை முன்னிட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் ‘மாநாடு படத்தின் தொடக்கம் முதல் வெளியீடு வரை இருந்த எல்லா தடங்கல்களையும்அடித்து நொறுக்கிவிட்டு இன்றோடு ஐம்பதாவது நாள் என்ற அழகிய நிறைவை எட்டியுள்ளது. நிச்சயம் 100 நாட்கள் சுவரொட்டி ஒட்டியே ஆக வேண்டும் என எனது எதிர்பார்ப்பு உள்ளது.

50 நாட்கள் இந்த சிக்கலான காலகட்டத்தில் படம் திரையரங்கில் ஓடுவது மிக சவாலானது. இந்த 50 நாட்கள் 100 நாட்களுக்கு இணையானது.
இடையில் புதுப்படங்கள் வந்து போனாலும் #மாநாடு தன் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டான்.. வெற்றி என்பது நமக்கு நாமே கூவிக் கொள்வதல்ல.
வெற்றி தன்னைத் தானே அறிவித்துக் கொள்ளும் என்பதாக இந்த வெற்றி தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது.

இதற்கு காரணமான நாயகன் சிலம்பரசன் TR, இயக்குநர் வெங்கட் பிரபு, ஃபைனான்சியர் திரு. உத்தம் சந்த் அவர்களுக்கும்... அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், வாங்கிய விநியோகஸ்தர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் பண்பலை நண்பர்கள் மற்ற மொழியிலும் இப்படத்தைக் கொண்டு சேர்த்த பத்திரிகை தொடர்பாளர்கள் அனைவருக்கும் இந்நாளில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கட்டான நேரத்தில் இரவு பகல் பாராமல் உடன் நின்று படம் வெளியாக உறுதுணையாக நின்ற அனைவருக்கும், என் தாய் தந்தைக்கும் இவ்வெற்றியை சமர்ப்பித்து மகிழ்கிறேன். நன்றி நன்றி நன்றி!’ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments