Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘8 தோட்டாக்கள்’ இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்.எஸ்.பாஸ்கர்...

‘8 தோட்டாக்கள்’ இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்.எஸ்.பாஸ்கர்...
, திங்கள், 10 ஏப்ரல் 2017 (17:17 IST)
சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்ற திரைப்படம் ‘8 தோட்டாக்கள்’.

]
 

 
8 தோட்டக்கள் படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷ். இவர் குறும்படம் இயக்கி வந்தார். அதன் பின் இயக்குனர் மிஷ்கினிடம் உதவியாளராக பணிபுரிந்தார். அதன் பின் 8 தோட்டாக்கள் படத்தை இயக்கினார். இந்த படம் சமீபத்தில் வெளியானது. 
 
இந்த படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக, இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள எம்.எஸ். பாஸ்கரின் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்தது.
 
திரைப்படத்துறையினர், பத்திரிக்கையாளர் என பலரும் எம்.எஸ். பாஸ்கரை தொடர்பு கொண்டு இந்த கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இதனால் சந்தோஷம் அடைந்த பாஸ்கர், படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷை தனது வீட்டிற்கு அழைத்து அவருக்கு சால்வை அணிவித்து, ஒரு தங்க சங்கிலியை பரிசாக அளித்துள்ளார். 
 
இதனால் இன்ப அதிர்ச்சியில் ஸ்ரீகணேஷ் திக்கு முக்காடி போயுள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதி சரியான கஞ்சன் ஜங்கா: இயக்குனர் தகவல்!!