Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்ஜிஆரால் அறிமுகம் செய்யப்பட்ட பழம்பெரும் பாடலாசிரியர் காலமானார்

எம்ஜிஆரால் அறிமுகம் செய்யப்பட்ட பழம்பெரும் பாடலாசிரியர் காலமானார்
, வியாழன், 25 மே 2017 (04:01 IST)
புரட்சி தலைவர் எம்ஜிஅர் அவர்கால் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின்னர் சிவாஜி, கமல், ரஜினி ஆகியோரின் படங்களில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பழம்பெரும் பாடலாசிரியர் கவிஞர் நா.காமராசன் நேற்று சென்னையில் உடல்நலக்கோளாறு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75





தமிழில் புதுக்கவிதை இயக்க முன்னோடியாக இருந்த நா.காமராசன், ஆரம்பட்தில் மரபுக்கவிதைகள் எழுதி வந்தார். பின்னர் காலப்போக்கில் வசனகவிதை, புதுக்கவிதை ஆகிய துறைகளுக்கு மாறி அவற்றிலே தன் சிறப்பை வெளிப்படுத்தினார். கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவர் ஒரு உருவகக் கவிஞர் ஆவார். அழகான கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடும் காமராசன், "கவியரசு, சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான்" என்றும் அழைக்கபடுகிறார். "தன் கால்களில் இரத்தம் கசியக்கசிய பழைய முட்பாதைகளில் முன்னேறி முதலில் புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவர் நா. காமராசன் தான் என்பதை மூர்ச்சை அடைந்தவன் கூட மறந்து விடக் கூடாது" என்று கவிஞர் வைரமுத்துவால் புகழப்பட்டவர்.

எம்.ஜி.ஆர் நடித்த 'பல்லாண்டு வாழ்க, சிவாஜி கணேசன் நடித்த 'ஆனந்தக்கண்ணீர்', கமல்ஹாசன் நடித்த 'அந்த ஒரு நிமிடம்', ரஜினிகாந்த் நடித்த 'தங்கமகன்'  உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் திரையிசை பாடல்களை எழுதியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நா.காமராசன் நேற்று காலமானார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'கலக்க போவது யாரு' ஃபைனலில் சந்தானம் தரும் சர்ப்ரைஸ்