இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை எடுக்கப்போவதாக கமலுடன் சேர்ந்து பிக் பாஸ் மேடையில் அறிவித்தார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார் என்று கூறப்பட்டது.
ஆனால், தில் ராஜு தான் தயாரிக்கவிருந்த இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டாராம். ஷங்கர் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டதால் இந்தியன் 2 படத்தை விட்டுக்கொடுத்திருக்கிறார் தில் ராஜு.
லைகா நிறுவனம் ஷங்கரின் 2.0 படத்தைத் தயாரிப்பதுடன், கமலின் சபாஷ் நாயுடு படத்தையும் தயாரித்துவருகிறது. அத்துடன், நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கும் மருதநாயகம் படத்தையும் தயாரிக்க லைகா விருப்பம் தெரிவித்திருக்கிறதாம்.