முற்றியது இந்தியன் 2 பிரச்சனை – ஷங்கருக்கு லைகா நோட்டீஸ் !

Webdunia
புதன், 29 மே 2019 (09:08 IST)
இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்டுவிட்டு புதிய படத்தின் வேலைகளை கவனிப்பதாக ஷங்கர் மீது லைக்கா நிறுவனம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றும் அதே நேரத்தில் முதல்கட்ட படப்பிடிப்பிலேயே திட்டமிட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு செலவானது, மேக்கப் குழு போன்றவற்றை ஷங்கர் மாற்றியதால் பல ஏற்பட்ட குழப்பங்கள் போன்ற காரணங்களால் படத்தைத் தொடர முடியாத சூழல் உருவானதாகவும் கூறப்படுகிறது. நீண்ட காலமாக படத்தைத் தொடங்குவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாததால் படம் கைவிடப்பட்டது என செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. 

இதனை அடுத்து ஷங்கர் தனது அடுத்தப்படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாகவும் அதற்காக சில தெலுங்கு தயாரிப்பாளர்கள் மற்றும் தெலுங்கு நடிகர் பிரபாஸை அனுகியுள்ளதாகத் தெரிகிறது. இதனையறிந்த லைகா மற்றப் படவேலைகளைக் கைவிட்டுவிட்டு உடனடியாக இந்தியன் 2 படத்தின் வேலைகளை ஆரம்பிக்குமாறு ஷங்கருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் இப்போது கமல் பிக்பாஸ் சீசன் 3 ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments