Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் லைகாவோடு இணையும் சிம்பு… இயக்குனர் இவர்தான்!

மீண்டும் லைகாவோடு இணையும் சிம்பு… இயக்குனர் இவர்தான்!
, புதன், 5 ஜனவரி 2022 (15:02 IST)
நடிகர் சிம்பு மாநாடு வெற்றிக்குப் பிறகு அடுத்து நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. பல ஆண்டுகளுக்கு சிம்புவுக்கு அமைந்த மிகப்பெரிய ஹிட் படம் என்றால் அது மாநாடுதான். இதனால் அடுத்தடுத்து சிம்பு நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க சிம்பு நடிக்க ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அவரை ஏற்கனவே அழைத்து இரண்டு முறை கதை விவாதம் செய்த சிம்பு, சமீபத்தில் சந்தித்து மூன்றாவது முறையும் பேசியுள்ளாராம். இதனால் அவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே லைகா நிறுவனம் சிம்புவை வைத்து தயாரித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் அட்டர் ப்ளாப் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடியில் ‘புஷ்பா’ ரிலீஸ் ஆகும் தேதி அறிவிப்பு!