Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று வெளியாகிறதா அஜித் 62 பட அப்டேட்… எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லைகா நிறுவனத்தின் பதிவு!

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (08:10 IST)
அஜித் 62 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் தற்போது லைகா நிறுவனம் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் இன்று காலை 10.30 மணிக்கு பெரிய அறிவிப்பு வர உள்ளதாக அறிவித்துள்ளதால், அது அஜித் ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது. அதனால் இன்று அஜித் 62 படத்தின் முதல் லுக் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதேனும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதற்கிடையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அருண் விஜய், அஜித்தோடு என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க அருள்நிதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா ஒன்றும் உங்கள் குடும்ப சொத்து இல்லை… கீர்த்தி சுரேஷ் தந்தைக்கு விநாயகன் பதில்!

விரைவில் சினிமாவை விட்டு விலகுவேன்… இயக்குனர் மிஷ்கின் தடாலடி பதில்!

ஹாட் & க்யூட்டான உடையில் கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்புவின் ஐம்பதாவது படத்தையும் கைப்பற்றுகிறதா ஏஜிஎஸ் நிறுவனம்?

அடுத்த கட்டுரையில்
Show comments