Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலைவிரிக்கும் ஐசரி கணேஷ்… சிக்காமல் நழுவும் ப்ரதீப் ரங்கநாதன்!

வலைவிரிக்கும் ஐசரி கணேஷ்… சிக்காமல் நழுவும் ப்ரதீப் ரங்கநாதன்!

vinoth

, புதன், 6 மார்ச் 2024 (07:48 IST)
கோமாளி படத்தின் மூலம் தன்னை ஒரு வணிக இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட ப்ரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு க்ரீத்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, சீமான் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் அவரை கோமாளி படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனர் ஐசரி கணேஷ் மீண்டும் அவரையும் ஜெயம் ரவியையும் வைத்து ஒரு படத்தை உருவாக்க ஆசைப்பட்டு அவரை அனுகியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பிடி கொடுக்காமல் ப்ரதீப் நழுவி வருகிறாராம். ஏனென்றால் அவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தவே ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிமாறனின் விடுதலை 2 இந்த ஆண்டு ரிலீஸ் ஆகாதா?