Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லவ் டுடே படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த பிரபல தயாரிப்பாளர்!

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (20:05 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி சக்க போடு போட்டு வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது. அந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்  இயக்கி இருந்தார். கோமாளி வெற்றியை அடுத்து இப்போது அவரே கதாநாயகனாகி இயக்கியுள்ள லவ் டுடே திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே படத்துக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது. முதல் நாளில் சுமார் 6 கோடி ரூபாய் அளவில் வசூலித்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் 3 நாட்க்ளில் 14 கோடி ரூபாய் அளவுக்கு படம் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் திரையரங்குகள் மூலமாக 35 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கும் எனவும், படத்தின் பட்ஜெட்டை விட 4 மடங்கு லாபம் ஈட்டும் என்றும் சொல்லப்படுகிறது. இதுபோல ஓடிடி, சேட்டிலைட் மற்றும் ரீமேக் உரிமைகள் மூலமாக கூடுதலாக லாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படி லாப மழை கொட்டும் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா மிஸ் செய்துள்ளார். ஏனென்றால் கோமாளி படத்துக்குப் பிறகு பிரதீப், இந்த கதையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்குதான் இந்த கதையை சொல்லி படமாக்க தயாராகி வந்துள்ளார். ஆனால் அப்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சில பெரிய படங்களை தயாரிக்க இருந்ததாலும்  சில பொருளாதார பிரச்சனைகள் சிக்கி இருந்ததாலும், தாமதம் ஆகிக் கொண்டே வந்ததால், பிரதீப் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு இந்த படத்தை இயக்கினார். இந்நிலையில் பிரதீப்பின் அடுத்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்.. கார்ஜியஸ் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் வைரல் புகைப்பட ஆல்பம்!

தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த அஸ்வின்… ரசிகர்கள் கருத்து!

ஒரே நாள்ல 1000 ஆண்களோட பண்ணனும்.. ஆபாச நடிகையின் ஆபத்தான முயற்சி! - எச்சரிக்கும் பிரபலங்கள்!

இயக்குனர் பாலாவின் 25 ஆண்டு கால திரையுலக வாழ்க்கை: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments