Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'அண்ணா' என்று சொன்ன லாஸ்லியா! அதிர்ச்சியில் கவின்

Advertiesment
கவின்
, ஞாயிறு, 30 ஜூன் 2019 (09:22 IST)
பிக்பாஸ் வீட்டில் காதல் இளவரசனாக வலம் வந்து கொண்டிருக்கும் கவினை லாஸ்லியா 'அண்ணா' என்று சொல்லிவிட்டதால் அவர் கடுப்பாகியுள்ளார்.
 
பிக்பாஸ் வீட்டில் கவினை சுற்றி எப்போதுமே அபிராமி, சாக்சி, ரேஷ்மா, ஷெரின் ஆகிய நால்வரும் இருப்பார்கள். லாஸ்லியா கவின் மட்டுமின்றி எல்லோரிடமும் ஒரு இடைவெளியுடன் அதே நேரத்தில் ஜாலியாகவும் பழகி வருகிறார்.
 
இந்த நிலையில் நேற்று லாஸ்லியாவை வழிவிடாமல் கவின் கலாட்டா செய்ததால் ஒரு கட்டத்தில் சோர்ந்துபோன் லாஸ்லியா, கவினை 'அண்ணா' என்று அழைத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கவின், 'என்னை போய் எப்படி அண்ணா என்று கூப்பிடலாம் என்று கூறி லாஸ்லியாவின் வாட்டர் பாட்டிலை எடுத்து வைத்து கொண்டார். 
 
இன்று இரவுக்குள் என்னிடம் இருந்து இந்த வாட்டர் பாட்டிலை நீ வாங்கிவிட்டால் உன்னை நான் தங்கையாக ஏற்றுக்கொள்கிறேன்' என்று கூற லாஸ்லியாவும் என்னென்னவோ செய்து பார்த்தும் முடியவில்லை என்பதால் கடைசியில் வேறு வழியின்றி 'இனிமேல் அண்ணா' என்று கூப்பிட மாட்டேன்' என கவினிடம் சரண் அடைந்தார். இதனையடுத்து லாஸ்லியாவிடம் கவின் வாட்டர் பாட்டிலை கொடுத்தார். 
 
கவினின் இந்த ரொமான்ஸ் நாடகம் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை கலகலப்பாக்கியது என்று கூறலாம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை பூர்ணாவின் கியூட் எஸ்ப்ரெசென்ஸ்!