Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆமாம்! நான் கவினை தெரிஞ்சே சைட் அடிக்குறேன்!

ஆமாம்! நான் கவினை தெரிஞ்சே சைட் அடிக்குறேன்!
, வியாழன், 25 ஜூலை 2019 (15:55 IST)
பிக்பாஸ் வீட்டிலிருக்கும் கவின் அடுத்தடுத்து ஒவ்வொரு பெண்ணாக உஷார் செய்து விடுகிறார். அதற்கேற்றாற்போல் அங்கிருக்கும் பெண்களும்,  அவர் சும்மா இருந்தாலும் இவர்களே உசுப்பேத்தி விடுகின்றனர். 


 
அதில் குறிப்பாக ஆரம்பத்தில் அபிராமியுடன் காதல் கிசுகிசுக்கப்பட்ட கவின் பின்னர் சாக்ஷியுடன் ரொமான்ஸ் செய்ய ஆரம்பித்தார். இதனால் பார்வையாளர்களே மிகுந்த வெறுப்புள்ளாகினர்.பின்னர் நெட்டிசன்ஸ் பலரும்  பிளே பாய் கவின் என்று மோசமாக விமர்சித்தனர்.
 
இந்நிலையயில் தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் மதுமிதா மற்றும் ரேஷ்மா இருவரும் லாஸ்லியாவை கவினுடன் இணைத்து கிண்டல் செய்கின்றனர். இதனால் லாஸ்லியா கவினுடன் சென்று பஞ்சாயத்து வைக்க, எப்போதும் லாஸ்லியாவிற்கு பரிந்து பேசும் கவின் ‘அந்த புள்ளை தான் வந்த முதல் நாளிலே சொல்லிடிச்சே’ என்று கூற, அதற்கு லாஸ்லியா முன்ன தெரியாமல் அடிச்ச, இப்போ தெரிந்தே சைட் அடிக்கிறேன் என்று கூறுகிறார். 
 
இதை வைத்து பார்க்கும் போது கவினின் அடுத்த ரூட் லொஸ்லியாவுடன் தான் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது. எனவே அடுத்த ஒரு வாரத்திற்கு லெஸ்லியா - கவின் ரொமான்ஸ் பிக்பாஸில் ஓடும். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக நுழைந்த போலீசார்- கப்பலேறி போன மீராவின் மானம்!