Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொடைக்கானலில் விஜய்- லோகேஷ் பட ஷூட்டிங்…!

கொடைக்கானலில் விஜய்- லோகேஷ் பட ஷூட்டிங்…!
, வெள்ளி, 20 ஜனவரி 2023 (12:35 IST)
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கியது.

விக்ரம் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. ஜனவரி மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.
இப்போது இந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பல வில்லன்கள் நடித்து வரும் நிலையில் அதில் ஒரு வில்லனாக மிஷ்கின் நடித்து வருகிறார். சமீபத்தில் மிஷ்கின் சம்மந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டன.

முதலில் மிஷ்கின் மற்றும் விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகளைதான் லோகேஷ் படமாக்கி வருகிறார். இருவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் சில நாட்கள் படமாக்கப்பட்ட நிலையில், இப்போது அடுத்த கட்ட ஷூட்டிங்குக்காக கொடைக்கானலுக்கு படக்குழு சென்றுள்ளதாம். அங்கு 10 நாட்கள் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெட்பிளிக்ஸ் சி.இ.ஓ திடீர் விலகல்.. என்ன காரணம்?