Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி லியோ உங்களுடையது… ஸ்பாய்லர் மட்டும் வேணாம்… ரசிகர்களுக்கு லோகேஷ் வேண்டுகோள்!

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (07:15 IST)
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 43 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது. லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக  இன்னும் சில மணிநேரங்களில் வெளியாக இருக்கும் நிலையில் படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக உள்ளது.

இந்நிலையில் படம் ரிலீஸ் ஆவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் “ படம் ரிலீஸ் ஆக இன்னும் சில மணிநேரங்களே உள்ளன. இப்போது உணர்வுப்பூர்வமாக உணர்கிறேன். இதற்குக் காரணமாக இருந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி.  இதில் ரத்தத்தையும் வியர்வையும் கொட்டிய அனைவருக்கும் நன்றி.

லியோ படம் LCU வா இல்லையா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். ரசிகர்கள் வெளியே யாருக்கும் ஸ்பாய்லர்களை சொல்லவெண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

2 ஹீரோ, 4 ஹீரோயின்கள் படத்தை தயாரிக்கும் ரவிமோகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments