Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ படத்தின் உண்மையான பட்ஜெட் எவ்வளவு?- இயக்குனர் லோகேஷ் பகிர்ந்த தகவல்!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (06:42 IST)
சில தினங்களுக்கு முன்னர் வெளியான விஜய்யின் லியோ திரைப்பட டிரைலர் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. ஏற்கனவே படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இப்போது அந்த எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் வேலைகளை தொடங்கியுள்ள தயாரிப்பாளர் லலித், தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்புக் காட்சிகள் திரையிடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் அதற்கான அனுமதி கிடைக்காததால் படம் காலை 10 மணிக்குதான் முதல் காட்சி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் எனவும் உத்தரவு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது படத்துக்கான பரமோஷன்களில் ஈடுபட்டு வரும் இயக்குனர் லோகேஷ் படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டு வருகிறார். அதில் ஒரு நேர்காணலில் லியோ படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்று கேட்கப்பட்ட போது “300 கோடி ரூபாய்” என்று கூறியுள்ளார். இந்த படத்தில் விஜய் தவிர பல மொழி நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

அடுத்த கட்டுரையில்
Show comments