Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கைதி 2 ஏற்கனவே பாதி எடுத்து முடிச்சாச்சு..! – லோகேஷ் வெளியிட்ட திடீர் தகவல்!

Advertiesment
கைதி 2 ஏற்கனவே பாதி எடுத்து முடிச்சாச்சு..! – லோகேஷ் வெளியிட்ட திடீர் தகவல்!
, திங்கள், 15 நவம்பர் 2021 (16:27 IST)
கைதி இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங் பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2019ல் வெளியான படம் கைதி. தமிழில் மிகப்பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற இந்த திரைப்படத்தை வேறு மொழிகளிலும் ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கைதி 2 படம் எப்போது தொடங்கும் என பலரும் ஆவலாக காத்துள்ளனர்.

ஆனால் அதற்கு லோகேஷ் கனகராஜ் மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கைதி 2 குறித்து பேசியுள்ள லோகேஷ் கனகராஜ், கைதி முதல் பாகத்தின்போதே இரண்டாம் பாகத்திற்கான காட்சிகள் பலவும் படமாக்கப்பட்டுவிட்டதாகவும், இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் மொத்த படமும் முடிந்து விடும் என தெரிவித்துள்ளார். இதனால் விக்ரம் படவேலைகள் முடிந்ததும் லோகேஷ் கைதி2 பணிகளில் இறங்குவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா அண்ணன் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்.. அவர் சொன்னதை செய்வோம்! – ரசிகர்களுக்கு தலைமை மன்றம் கடிதம்!