Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தி, விஜய் அடுத்து கமல்! – தமிழ் சினிமாவை கலக்கும் லோகேஷ் கனகராஜ்

Webdunia
செவ்வாய், 5 நவம்பர் 2019 (18:21 IST)
கைதி படத்தை தொடர்ந்து விஜய் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்து கமல் நடிக்கும் படத்தை இயக்க உள்ளது உறுதியாகியுள்ளது.

தனது முதல்படமான மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற லோகேஷ் கனகராஜ், இரண்டாவதாக கார்த்தியின் கைதி படத்தின் மூலம் முக்கியமான புதிய இயக்குனர்கள் வரிசையில் அடியெடுத்து வைத்துள்ளார். கைதி படம் வெளியாகும் முன்னரே விஜய்யின் அடுத்த படத்தை இயக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்தை லோகேஷ் இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

கைதி படத்தின் நாயக சாயல் கமல் நடித்த விருமாண்டி படத்தின் தாக்கத்தில் உருவானது என லோகேஷ் ஒரு நேர்காணலில் சொல்லியிருக்க, தற்போது அந்த கமல்ஹாசனையே வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது லோகேஷ் கனகராஜுக்கு! அதேசமயம் கைதி பாகத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். விஜய் மற்றும் கமல்ஹாசன் பட பணிகள் முடிந்த பிறகே கைதி இரண்டாம் பாகத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என கூறப்படுகிறது.

அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களை இயக்குவதால் செம பிஸியாக இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments