Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டார் நடிகர் மீது பலான புகாரை சுமத்திய விஜய் பட நடிகை!

Webdunia
செவ்வாய், 5 நவம்பர் 2019 (17:46 IST)
நடிகை இஷா கோபிகர், காலையில் வாக்கிங் செல்லும் பிரபல ஸ்டார் நடிகர் மீது பலான புகாரை சுமர்த்தி இருப்பதி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
பாலிவுட் நடிகையான இஷா கோபிகர், தமிழில் பிரசாந்துடன் காதல் கவிதை, விஜய்யுடன் நெஞ்சினிலே, அரவிந்த்சாமியுடன் என் சுவாசக் காற்றே, விஜயகாந்துடன் நரசிம்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
இவருக்கு திருமணமாகி குழந்தை பிறந்ததும் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். சமீபத்தில் பாலிவுட் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள இவர் ஒரு ஸ்டார் நடிகர் மீது புகார் முன்வைத்துள்ளார். 
 
அந்த பேட்டியில் அவர தெரிவித்ததாவது, ஒரு முறை தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் படம் எடுக்கிறோம். அதனால் இந்த நடிகரை அழைத்து பேசுங்கள். நடிகர்களிடம் நீங்கள் நல்ல பெயர் வாங்க வேண்டும் என் கூறினார். இதையடுத்து நான் அந்த நடிகருக்கு போன் செய்தேன்.
அந்த நடிகரோ, நான் ரொம்ப பிசி.  டப்பிங் பேசுவதற்கும், மற்றொரு விஷயத்தை செய்வதற்கும் இடையே தன்னை தனிமையில் வந்து சந்திக்குமாறு கூறினார். இதன் பின்னணியை புரிந்துக்கொண்டு நாளை நான் ஃப்ரீயாக இல்லை, எப்பொழுது ஃப்ரீயாக இருப்பேன் என்று பின்னர் சொல்கிறேன் என்று அவரிடம் கூறி தப்பித்துவிட்டேன் என தெரிவித்துள்ளார். 
 
இதனுடன் அந்த நடிகர் அதிகாலையில் எழுந்து ஜிம் செல்லும் பழக்கம் உள்ளவர் என்றும் ஒரு க்ளு கொடுத்துள்ளார். ஒப்போது அந்த நடிகர் யாராக இருக்கும் என்பதுதான் பேச்சு... 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments