Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்கவ் திரும்ப வர சான்ஸ் இருக்கா..? ஷாந்தனுவுக்கு லோக்கி அளித்த பதில்!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (11:17 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் நடத்திய கேள்வி – பதில் நிகழ்வில் நடிகர் சாந்தனுவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து சமீபத்தில் வெளியான படம் விக்ரம். இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் சில நிமிடங்கள் மட்டும் தோன்றினார். இந்த படத்தில் லோகேஷின் முந்தைய படமான கைதியின் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த படம் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் #AskDirLokesh என்ற ஹேஷ்டேகில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார், அதில் சில பிரபலங்களுமே அவரிடம் கேள்வி எழுப்பினார்கள்.

அதில் நடிகர் சாந்தனு “மாஸ்டர் படத்தில் இறந்த பார்கவ் உங்களுடைய மல்டிவெர்ஸில் மீண்டும் வருவாரா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு லோகேஷ் “சாரி மச்சி.. பார்கவ் செத்துட்டான்” என்று பதிலளித்துள்ளார். லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படத்தில் பார்கவ் கேரக்டரில் சாந்தனுதான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments