Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா படத்தில் நடிகராக இணையும் லோகேஷ் கனகராஜ்!

vinoth
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (09:24 IST)
சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட புறநானூறு திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் இந்த படத்தில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்பட்டது.

படம் தொடர்பாக சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையில் கதை சம்மந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த படம் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ், ஆர் ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வருங்கால கதாநாயகி' லக்‌ஷனா ரிஷி- இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு "எங்க அப்பா" ஆல்பம் இசை விழாவில் பாராட்டு!

ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தின் வீடியோக் காட்சிகல் இணையத்தில் லீக்… லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்!

பிரபல பாடகியோடு நெருக்கம் காட்டும் ஜெயம் ரவி?... இதுதான் விவாகரத்துக்கு காரணமா?

என் மகன் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேரவேண்டும் என்று சொன்னால் நான் ஒப்புக் கொள்வேனா?- அரவிந்த் சுவாமியின் கவனம் ஈர்த்த பேச்சு!

நான் சிலரை கைதூக்கிவிட நினைத்தேன்… ஆனால் அவர்கள் என் காலை வாரிவிட்டார்கள் – சார் பட நிகழ்ச்சியில் விமல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments