கடந்த வெள்ளியன்று சுமார் 5 படங்கள் வரை வெளியாக இருந்தது. ஆனால் திடீர் திடீரென ஓவியாவின் '90 எம்.எல்' உள்பட ஒருசில படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டு இறுதியில் 'கண்ணே கலைமானே', எல்.கே.ஜி மற்றும் டூலெட் ஆகிய படங்கள் மட்டும் வெளியானது
இந்த நிலையில் சீனுராமசாமி, உதயநிதி, யுவன்ஷங்கர் ராஜா என பிரபலமான நட்சத்திரங்கள் இருந்தும் 'கண்ணே கலைமானே' திரைப்படத்தின் வசூல் திருப்தியாக இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் 'எல்.கே.ஜி' திரைப்படம் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது. அதிகாலை 5 மணி காட்சி முடிந்ததுமே சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ் ரிசல்ட் பதிவு செய்யப்பட்டதே இதன் வெற்றிக்கு ஒரு காரணமாக உள்ளது
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் 'எல்.கே.ஜி திரைப்படம் சென்னையில் மட்டும் ரூ.1.36 கோடி வசூல் செய்துள்ளது. ஆனால் 'கண்ணே கலைமானே' திரைப்படம் மூன்று நாட்களில் ரூ.52 லட்சம் மட்டுமே சென்னையில் வசூலித்துள்ளது. எல்.கே.ஜியின் பாதி வசூலைகூட 'கண்ணே கலைமானே' வசூலிக்கவில்லை என்பது குறிப்ப்பிடத்தக்கது
மேலும் எல்.கே.ஜி படத்தின் பாசிட்டிவ் ரிசல்ட்டை அடுத்து தற்போது திரையரங்குகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது