Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்கார்' ஆடியோ: ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி செய்தி

Advertiesment
சர்கார்' ஆடியோ: ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி செய்தி
, வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (20:27 IST)
தளபதி விஜய் நடித்துள்ள 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரவுபகலாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தை வரும் தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதால் அதற்குள் பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழா மேற்கு தாம்பரம் அருகில் உள்ள ஒரு கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்கனவே பார்த்தோம். இந்த இசை வெளியீட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 250 ரசிகர்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விமானத்தில் அழைத்து வருகிறது.

webdunia
இந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 2ஆம் தேதி சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நேரில் இசை வெளியீட்டுக்கு செல்ல முடியாத விஜய் ரசிகர்களுக்கு இந்த தகவல் ஒரு இன்ப அதிர்ச்சியான தகவல் என்பதில் சந்தேகம் இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செக்க சிவந்த வானம்: சிம்புவா? விஜய் சேதுபதியா?