Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்கிரண் அறிமுகக் காட்சியைக் கேட்டதும் விஜய் மறுத்திவிட்டார்… சண்டக்கோழி பிளாஷ்பேக் சொன்ன லிங்குசாமி!

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (07:40 IST)
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் சண்டக்கோழி. இந்த படம் வெளியாகி 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து விஷால் சமீபத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் லிங்குசாமி ஒரு சுவாரஸ்ய தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “இந்த படத்தில் முதலில் விஜய்யைதான் நடிக்க வைக்க விரும்பினேன். அவருக்குக் கதையும் விவரித்தேன். முதல் பாதி கேட்ட போது ஆர்வமாக இருந்தார். ஆனால் இரண்டாம் பாதியில் ராஜ்கிரண் அறிமுகக் காட்சியைக் கேட்டவுடன் அவர் மீதிக் கதையைக் கேட்கவில்லை.

அதன் பிறகுதான் விஷால் இந்த படத்துக்கு வந்தார். சண்டக்கோழி ரிலீஸுக்குப் பின்னர் விஜய் ஒரு நிகழ்ச்சியில் என்னை சந்தித்து படத்தைப் பற்றி பாராட்டினார்.  இந்த படத்தில அவர் நடிக்காததால் அவர் மேல் எனக்கு கோபம் இருந்தது. நீங்கள்தான் இரண்டாம் பாதியைக் கேட்கவேயில்லையே எனக் கூறினேன். அதற்கு விஜய் இந்த படத்துக்கு விஷால்தான் பொருத்தமாக இருந்தார். விஷால் போன்ற ஹீரோ தமிழ் சினிமாவுக்கு தேவை என்று கூறினார். இதைக் கேட்டதும் அவர் மேல் இருந்த கோபம் மறைந்தது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரி - பிரசாந்த் படத்திற்கு பாலிவுட் ஹீரோயின்.. மும்பையில் கதை விவாதம்..!

அன்பறிவ் இயக்கும் படத்தை தள்ளி போடுகிறாரா கமல்ஹாசன்? ‘தக்லைஃப்’ தோல்வி காரணமா?

எச். வினோத் இயக்கத்தில் ரஜினிகாந்த்.. எதிர்ப்பு தெரிவிப்பாரா தனுஷ்?

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2: போட்டியாளர்கள் யார், யார்?

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments