எல் ஐ கே ரிலீஸில் இருந்த குழப்பம்… புத்திசாலித் தனமாக தப்பித்த தயாரிப்பாளர் லலித் குமார்!

vinoth
புதன், 26 நவம்பர் 2025 (08:05 IST)
நடிகராக அடுத்தடுத்து மூன்று ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தனது முத்திரையைப் பதித்துள்ளார் பிரதீப். அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்ற படத்தில் நடித்து வருகிறார். LIK படம் கடந்த ஆண்டே ஆரம்பிக்கப்பட்டாலும், தாமதமான ஷூட்டிங் காரணமாக வருன் டிசம்பர் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டாலும், இதுவரை ஓடிடி வியாபாரம் முடியாமல் இருந்த நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் நிறுவனம் படத்தை வாங்கியுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது தயாரிப்பாளருகும் ஓடிடி நிறுவனத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இந்த படத்தை வாங்குவதில் இருந்து அமேசான் ப்ரைம் நிறுவனம் பின் வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.

அதனால் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தேதியில் ரிலீஸாகவேண்டும் என்பதில் இயக்குனரும் இணைத் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் உறுதியாக இருந்துள்ளார். அதனால் படத்தின் ஓடிடி உரிமையை விக்னேஷ் சிவனிடமே கொடுத்துவிட்டாராம் லலித்குமார். அவர் அதை வைத்து ஓடிடி நிறுவனம் ஒன்றிடம் pay per view முறையில் வியாபாரத்தை முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து படம் அறிவித்தபடி டிசம்பர் 18 ஆம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து ஃபுல் ட்ரீட்தான்.. ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் எப்போ தெரியுமா? அதுமட்டுமா?

யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஃபோட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் கலெக்‌ஷன்ஸ்!

பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

சிம்பு & வெற்றிமாறனின் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம்… காரணம் ஐசரி கணேஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments