விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின்!

vinoth
வியாழன், 13 நவம்பர் 2025 (14:12 IST)
ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட்டாக கொடுத்த இயக்குனர் அட்லி, அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

இதற்கிடையில் அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ‘ ஏ ஃபார் ஆப்பிள்’ நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து படங்களைத் தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கும் என சொல்லப்பட்டது.

ஆனால் இதுவரை தொடங்கவில்லை. விஜய் சேதுபதி தற்போது பூரி ஜெகன்னாத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதனால் தற்போது முன் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார் பாலாஜி தரணிதரன். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸை ஒப்பந்தம் செய்துள்ளனராம் படக்குழு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹீரோவாகும் அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ் சம்பளம் இத்தனை கோடியா?

பல சிக்கல்களைக் கடந்து ஒரு வழியாக க்ளைமேக்ஸுக்கு வந்த ‘தி ராஜாசாப்’ படப்பிடிப்பு!

ஜனநாயகன் தமிழக விநியோக உரிமை வியாபாரத்தில் எழுந்த சிக்கல்…!

துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறாரா லிங்குசாமி?

சுந்தர் சி க்கு ரஜினி பட வாய்ப்புக் கிடைக்க காரணமாக அமைந்த மூக்குத்தி அம்மன் 2!

அடுத்த கட்டுரையில்
Show comments