Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''சரித்திரத்தை மீண்டும் நினைவுறுத்துவோம்'' - உதயநிதியை வாழ்த்திய கமல்!

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (13:38 IST)
சரித்திரத்தை மீண்டும் நினைவுறுத்துவோம் என நடிகர் கமல்ஹாசன் ஒருபதிவிட்டு, நடிகரும் எம்.எல்.ஏவுமான  உதய நிதியை வாழ்த்தியுள்ளார்.

விஸ்வரூப படத்திற்குப் பிறகு நடிகர் கமலின் திரைப்படங்கள் அதிக வசூலைப் பெறவில்லை.

இதையடுத்து, பிக்பாஸ் மற்றும்  தேர்தலில் கமல் பிஸியானார்.அதன்பின்னர்,  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.

இப்படத்தை  தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. விநியோகம் பற்றிய வசூல் நிலவரத்தையும், கணக்கை சரியாக காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் மற்றும் உதயநிதி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியானது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக எதிர்பார்ப்புகள் எழுந்தது.

இதை உறுதிப்படுத்தும் விதமான இன்று கமல்ஹாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம்! தம்பி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார். இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த படம் ராஜ்கமல் பிலிம்ஸின் 54வது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்  பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. மீண்டும் நினைவுறுத்துவோம் என நடிகர் கமல்ஹாசன் ஒருபதிவுட்டு, நடிகரும் எம்.எல்.ஏவுமான  உதய நிதியை வாழ்த்தியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments