Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் ரஜினியை வீட்டில் சந்தித்த சிறுத்தை சிவா !

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (17:51 IST)
நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் இயக்குநர் சிவா இன்று சந்தித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வந்த படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்பின்னர், ரஜினிகாந்த் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு நுரையீரல் பாதிப்பால் மருத்துவ ஆலோசனைப் பெற்று சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அரசியலில் தான் ஈடுபடப்போவதில்லை என்று கூறி தற்போது சென்னையிலுள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

அதனால் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தாமதமாகும்  எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் சிவா அடுத்து சூர்யாவின் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுவருவதாகத் தகவல்கள் வெளியானது.

ஆனால் ரஜினிகாந்த் தான் அரசியலில் இறங்கப்போவதில்லை, கட்சி தொடங்கப்போவதில்லை என்று உறுதியாகக் கூறிவிட்டநிலையில் அவர் எப்போது அண்ணாத்த படப்பிடிப்பை தொகுங்குவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் இயக்குநர் சிவா இன்று  சந்தித்துள்ளது சினிமா வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்துவரும்  ரஜினிகாந்த், இனி அண்ணாத்த பட ஷூட்டிங்கை மீண்டும் தொடங்குவது குறித்து அவர் சிவாவுடன் பேசியுள்ளதாக தெரிகிறது. மேலும் ஜூன் 4 ஆம் தேதி அண்ணாத்த படத்தின் சிங்கில் பாடல் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெளி தயாரிப்பாளர் படத்தில் கமல் நடிக்க மாட்டாராம்.. 10 வருஷமா அதுதானே நடக்கிறது?

கமல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாரா சாய்பல்லவி? என்ன காரணம்?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments